இதையும் படிக்கவும்

எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செய்தால் பலன் உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் இந்த MLM விஷயம் மட்டும் தொடர்ந்து செய்யும்போது அதிக பலன் தரும். காரணம், மற்ற அனைத்தும் 1:1 என்ற விகிதத்தில் பலன் தரும். அதாவது நம் முயற்சி 1 பங்கு என்றால் பலனும் ஒரு பங்கு. இதுவே MLM எனில் நம் முயற்சி 1 பங்கு என்றால் பலன் பல பங்கு.

மேலும், மற்ற பல வகையான வாய்ப்புகள் active வகையைச் சேர்ந்தவை. அதாவது நாம் செய்துகொண்டே இருந்தால் வருவாய் வந்துகொண்டிருக்கும். நிறுத்தி விட்டால் நின்றுவிடும். இதுவே MLM எனில் ஒரு கட்டத்தில் நாம் செய்வதை நிறுத்தினாலும் வருவாய் நிற்காது. இதை passive வருவாய் அதாவது முயற்சி எதுவும் செய்யாமல் கிடைக்கும் வருவாய் என்கிறோம்.

ஆன்லைனில் உள்ள பல வாய்ப்புகள் MLM போன்று இயங்குகின்றன. இருப்பினும் பெரும்பாலானவை இலவசம் என்பதால் நாம் கவலைப்படுவதில்லை. (இருப்பினும் இலவசமாக கிடைப்பதால் அதை பலரும் மதிப்பதில்லை.)

"உங்கள் லிஸ்ட் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பணம்" என்று மார்க்கெட்டிங் வழக்கு உண்டு. முற்றிலும் உண்மை. மாறாக "எனக்கு மார்க்கெட்டிங் பிடிக்காது" என்று சொல்வது மறைமுகமாக "பணம் சம்பாதிக்க நான் பாடுபடத் தயாராக இல்லை. ஆனால் பணம் என் மடியில் வந்து விழவேண்டும்." என்றே பொருள் தரும்.

பணம் சம்பாதிக்க வேறு வழிகளும் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பணம் போட்டு பணம் எடுக்கும் வகையானவை. மற்றபடி சாமானிய மக்களுக்கு மார்க்கெட்டிங் வாய்ப்புகளே வரப்பிரசாதம்.

குறைந்த முதலீடு, குறைந்த ரிஸ்க் ஆனால் அதிக வருவாய்க்கான வாய்ப்பு. மோதிப் பார்த்துவிடுவதே நல்லது. இது என் கருத்து.

0 comments:

Post a Comment

~~Advertisement~~